பதிவு செய்த நாள்
01
ஆக
2020
08:08
கோத்தகிரி:கோத்தகிரி பண்ணாரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.அதிகாலை, 5:00 மணி முதல் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இதில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, சிறுவர்கள், மகளிர் மன்றத்தினர் உட்பட, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இதே போல, கோத்தகிரி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் எழுந்தருளியுள்ள அம்மன் கோவில்களிலும், ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. சமூக இடைவெளியில் பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.