அஞ்சனை பெற்ற வீரம் மிக்க பிள்ளை ஆஞ்சநேயர். ஆனால், அவர் விலங்கிடப்பட்டு கட்டப்பட்டவராக காட்சி தரும் தலம் திருப்பதி. அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து வெங்கடேசப் பெருமாளிடம் பிள்ளைவரம் பெற்றாள். ஒருநாள் அனுமன் விளையாட்டாக வானை நோக்கிப் பறந்தான். அஞ்சனாவுக்கு கோபம் வந்துவிட்டது. பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தாள். பிள்ளைவரம் கொடுத்த வெங்கடேசப் பெருமாளின் எதிரில் வணங்கும்படி நிற்க வைத்தாள். விண்வெளியை மாயக் கயிறாக்கி கைகளில் விலங்கிட்டாள். அன்று முதல் இன்றுவரை அம்மாவின் பேச்சைத் தட்டாமல் அனுமன் கட்டுக்குள் சிக்கி வீற்றிருக்கிறார். இவருக்கு பேடி ஆஞ்சநேயர் என்பது திருநாமம். இரு கைகளையும் குவித்தபடி வெங்கடேசப் பெருமாளை வணங்கியபடி காட்சி தருகிறார்.