தேவகோட்டை:தேவகோட்டை கோட்டையம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா நிறைவு பெற்றது.ஜூலை 20ம் தேதி பூர்வீக கோட்டையம்மன் கோவிலிலிருந்து பிடி மண் எடுத்து வந்து நகரில் உள்ள கோவிலில் கோட்டையம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் இரு வேளை அபிேஷகம், பூஜை நடந்தது. கோவில் முழுவதும் அடைக்கப்பட்டு டிரஸ்டிகள் மட்டுமே பங்கேற்றனர். நேற்று அம்மனுக்கும்,பீடத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து அம்மனை அருகில் உள்ள ஊரணியில் நீரில் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நிறைவு பெற்றது.