1963ல் அமெரிக்காவில் ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். பிரச்சாரத்தின் போது விஷமி ஒருவர் துப்பாக்கியால் சுட, ரத்த வெள்ளத்தில் மிதந்தார். மரணத்தோடு போராடிய போது அருகில் இருந்த நண்பனிடம், ‘‘எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? மற்றவர்களுக்கு ஆபத்து இல்லையே’’ எனக் கேட்டார். இப்படி மரண தறுவாயில் கூட மற்றவர் மீது அன்பு செலுத்தினார். ஆண்டவர் சிலுவையில் அறைந்த நேரத்திலும் அன்பு காட்டினார். நாம் பிறர் மீது அன்பு செலுத்தினால் அன்பே நமக்கு கிடைக்கும்.