சிவாச்சாரியார் சேவா சங்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2020 03:08
காரைக்கால் : அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருநள்ளாரில் நடந்த விழாவில் மாநில துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் தலைமையில் குரு வந்தனம் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜா சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் சிவாச்சாரியார் மகா சங்கல்பம் செய்தார்.மாநில இணைச்செயலர் சக்தி மணிகண்டன் அஷ்டோத்திர அர்ச்சனை, விநாயகர் தேவாரம் பஜனை பாடல், தேவாரம் கணபதிதாளம் மற்றும் விநாயகருக்கு மகா தீபாரதானை நடைபெற்றது. தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விடுபட்டு உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டி சங்கல்பம், செய்யப்பட்டு ஜெபம் அஷ்டோத்திர அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் மகாராஜா, வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.