Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ... பாலக்காடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் பாலக்காடு சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ஜெடையலிங்க சுவாமி கோயில் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ ஜெடையலிங்க சுவாமி கோயில் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
02:02

கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக நடந்தது.


கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்கய்யா சுவாமி திருக்கோவிலில் நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு சீகொலா பகுதியில் இருந்து, ஐய்யனை அழைத்துவரும் நிகழ்ச்சியுடன், விழா தொடங்கியது.


இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணிவரை அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், 4:00 மணி வரை, ஐய்யன் சத்திய தொடையுடன், புலி வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.


காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை, ஐயனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, கங்காதேவி பூஜை நடந்தது. தொடந்து, 1:30 மணிக்கு, முடிக்காணிக்கை நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வு நடந்தது. பகல், 2:00 மணிக்கு மேல், ஐய்யன் புலி வாகனத்தில் கோவிலை சுற்றி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 2:30 மணிக்கு, கக்க கரைதல் (தேவர்களை அழைத்தல்) நிகழ்ச்சி நடந்தது.


தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கூக்கல்தொரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி ஐய்யனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கூக்கல்தொரை, சீகொலா, குருமுடி மற்றும் உயிலட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar