நர்மதை நதிக்கரையில் மகாபலி சக்கரவர்த்தி யாகம் நடத்தினார். அவரிடம் தானம் பெறுவதற்காக மகாவிஷ்ணு, வாமனராக குள்ள வடிவெடுத்து பூலோகம் வந்தார். ‘வாமனர்’ என்பதற்கு ‘குள்ளமானவர்’ என்றும், ‘அழகானவர்’ என்றும் பொருளுண்டு. மார்பில் அணிந்திருந்த பூணுால், கையில் இருந்த கமண்டலம், தண்டம் ஆகியவை அவரின் அழகுக்கு அழகு சேர்த்தன. அவரை கண்ட அனைவரும் மெய் மறந்தனர். ‘கண்கள் குளிரும்படி வாமனன் நம்மிடம் வர மாட்டானா’ என ஆழ்வார்கள் பாசுரங்களில் பாடியுள்ளனர். ஓணத்தன்று கேரளாவில் வாமனர், மகாபலி வேடமிட்டு மக்கள் தெருக்களில் வலம் வருவர்.