செல்லலாமா என கேட்கக்கூடாது. கண்டிப்பாக செல்ல வேண்டும். காசி, ராமேஸ்வரம் மட்டுமில்லாமல் எந்த தலமாக இருந்தாலும், இளமையிலேயே சென்று வந்து விட வேண்டும். அப்போது தான், கை கால்கள் திடமாக இருக்கும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார்கள் நாராயண நாமத்தை இளமையில் சொல்லும்படி வற்புறுத்துகிறார்கள். வயதான காலத்தில் செல்லும்போது, நடக்க முடியாமல் கூட சிரமப்பட நேரிடலாம். உங்கள் பயணத்தை உடனே துவங்குங்கள்.