பதிவு செய்த நாள்
18
மே
2012
10:05
காரிமங்கலம்; காரிமங்கலம் அருகே உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 25ம் தேதி நடக்கிறது. காரிமங்கலம் அருகே வெள்ளையன் கொட்டாவூரில் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் செல்வவிநாயகர், பாலமுருகர், அக்குமாரியம்மன், நவகிரக மூர்த்திகளுக்கு கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் கும்பாபிஷேக விழா வரும் 25ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, 23ம் தேதி காலை 7 மணிக்கு மங்கல இசையும், 9 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, கங்கணம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் ஆகியவை நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு ராமசாமி கோவிலில் இருந்து மாரியம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல், 6 மணிக்கு கரிக்கோள ஊர்வலமும், 6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், இரவு 9 மணிக்கு மேல் கும்ப அலங்காரம், கலசஸ்தாபனம், முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, சிவசூரிய பூஜை, பஞ்ச கவ்வியம், மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, நெய்வேதியம், தீபராதனை நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னதானம் வழப்படுகிறது. காலை 11 மணிக்கு புற்று மண் எடுத்தல், கோபுர கலச ஸ்தாபனம், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அஸ்த கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா தீபராதனை ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு மகா சக்தி மாரியம்மன், செல்வ விநாயகர், பாலமுருகர், அக்குமாரியம்மன், நவகிரக மூர்த்திகள், பிரதிஷ்டை அஷ்டபந்தனம் ஆகியவை நடக்கிறது. 25ம் தேதி 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அருணேஷ்வரர் மலைக்கோவில் குருக்கள் பட்டாபிராமன் தலைமையில் சிவச்சாரியர்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னதானம் நடக்கிறது. 10.30 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு மகா சக்தி மாரியம்மன் திருக்கல்யான உற்சவம், மகா தீபராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு தேரில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.