பதிவு செய்த நாள்
06
செப்
2020
01:09
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாளை, நேற்று, 1,000க்கும் மேற்பட்டோர் தரிசித்தனர்.சென்னை அடுத்த, திருவிடந்தையில் உள்ள, நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருமண தோஷ பரிகார கோவிலாக விளங்குகிறது. திருமண தடை நீங்க, இங்கு வழிபடுவதற்காக, வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், பக்தர்கள் குவிகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், ஐந்து மாதங்களுக்கும் மேலாக, பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.இம்மாதம், 1ம் தேதி முதல் அனுமதிக்கும் நிலையில், பெருமாளிற்குரிய சனி நாளான நேற்று, 1,000க்கும் மேற்பட்டோர் தரிசித்தனர். பக்தர்கள், மாலை சாற்ற, வலம் வர அனுமதிக்கப்படாமல், தரிசிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.