மூன்றாம் படைவீடான பழநியில் மட்டும் இரண்டு கோயில்கள் உள்ளன. மற்ற படைவீடுகளில் ஒரு கோயில் உள்ளது. பழநி மலை அடிவாரத்தில் உள்ள கோயில் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். இதை ‘ஆதி கோயில்’ என்பர். மலை மீதுள்ள கோயிலை திருப்புகழில் அருணகிரிநாதர் ‘அதிசயம் அநேகமுற்ற பழநி’ என்று வர்ணிக்கிறார்.