Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி; பிரம்மாண்டமாக ... கோயில்களில் அர்ச்சனைக்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம் கோயில்களில் அர்ச்சனைக்கு தடை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று மகாளய அமாவாசை: வாழ்வு செழிக்க முன்னோரை வணங்குவோம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று மகாளய அமாவாசை: வாழ்வு செழிக்க முன்னோரை வணங்குவோம்

பதிவு செய்த நாள்

17 செப்
2020
05:09

மகாளய அமாவாசையான இன்று முன்னோர் வழிபாடு பற்றி காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேட்டால் இந்நாளின் மகத்துவம் புரியும். மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், ’தென்புலத்தார்’ எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். ’மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ’ என்று வேத மாதாவும் பெற்றோரை வழிபட நமக்கு வழிகாட்டுகிறாள். அவ்வைப்பாட்டியும், ’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று வேத சாரத்தை பிழிந்து கொடுத்திருக்கிறார்.

வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். அவர்களின் காலம் முடிந்த பிறகு செய்யும் ’பித்ரு காரியம்’ செய்வதில் தான் அனேகம் பேருக்கு சந்தேகம் எழுகிறது. இதில் இடம் பெறும் எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே தான் இருக்கின்றன. முன்னோர்கள் மறுபிறவி எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றலாம். சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர்தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கு ’சிரத்தையோடு செய்வது’ என்பது பொருள். முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar