திருவையாறு: முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ஆண்டு முழுதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, திருவையாறு காவிரியாறு புஷ்ப மண்டப படித்துறையில், மகாளய அமாவாசை திதியான இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், புனித நீராடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில், தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது.