பதிவு செய்த நாள்
23
செப்
2020
05:09
அவிநாசி: சப்ரான் இந்தியா அமைப்பினர் சார்பில், கந்த சஷ்டி கவசம் பாடல் புதிய வடிவிலான ஆடியோ மற்றும் வீடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், திரௌபதி சினிமா இயக்குனர் மோகன் இயக்கத்தில், ஜூபின், இசையமைப்பில், பாடகர் வேல்முருகன் பாடியிருந்தார். பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர், வீடியோ சிடி., வெளியிட, ஆம்ஸ்ட்ராங்க் பழனிசாமி பெற்று கொண்டார். பிறகு, ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகம், காமாட்சிபுரி ஆதினம், வேலூர் இப்ராஹிம், ரோட்டரி சங்க நிர்வாகி மனோகர் உள்ளிட்ட பலர் பங்கேற்று, பேசினர்.