வேணுகோபால சுவாமி கோவிலில் 23ம் தேதி கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2012 11:05
காஞ்சிபுரம்: நாயகன்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவில் புனர் உத்தாரண மகா கும்பாபிஷேக விழா, வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் அருகே வேகவதி ஆற்றின் கரையில் நாயகன்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கு, ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாயகன்பேட்டை நடுத்தெரு, சின்னத்தெரு பொதுமக்களும், வேணுகோபாலன் பஜனை சபாவினரும் இணைந்து மூலவருக்கு நூதன கோபுரமும், நுழைவாயிலில் மண்டபமும் அமைத்தனர். கோவில் வளாகத்தில் பக்த ஆஞ்சநேயர் சன்னிதி அமைத்து சிலை பிரதிஷ்டை பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, கோவிலில் வரும் 23ம் தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவும், மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 17ம் தேதி காலை, கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு துவங்கி, கும்பாபிஷேகத்திற்கான பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.