உடன்குடி : உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று (21ம் தேதி) துவங்குகிறது. வரும் 23ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தேரியூர் முத்தாரம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயில் கொடை விழா இன்று (21ம் தேதி) துவங்குகிறது. மாலை 6 மணிக்கு தேரியூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு சிறுவர், சிறுமியர் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சியும், இரவு 1 மணிக்கு அம்மன் வீதி உலாவும், நாளை காலை 6 மணிக்கு தேரியூர் வினைதீர்த்த விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வருதலும், பகல் 1மணிக்கு அம்மன்வீதி உலாவும், இரவு 7 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மன் சப்பரத்தில் பவனியும், 23ம் தேதி காலை 8 மணிக்கு தேரியூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 150 பெண்கள் கலந்து கொள்ளும் மெகா கோலப்போட்டி நடக்கிறது. பகல் 1 மணிக்கு அம்மன்வீதி உலா வந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இரவு 9 மணிக்கு திரைப்பட நிகழ்ச்சியில் முன்னணி சிரிப்பு நடிகர் கலந்து கொள்கிறார். வரும் 24ம் தேதி காலை 7 மணிக்கு கொடைவிழா நிறைவு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.