பதிவு செய்த நாள்
21
மே
2012
11:05
அரியலூர்: அரியலூர் ஸ்ரீமகா சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 1ம் தேதி நடக்கிறது.அரியலூர் பெரிய அரண்மனை தெருவில், பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி விநாயகர் கோவிலை, புதுப்பித்து கட்டும் திருப்பணி வேலைகள் கடந்த ஓராண்டாக நடந்தது.அரியலூர் தாசில்தார் முத்துவடிவேலு, தபால்துறை தலைவர் பாலசுப்ரமணியன், தியாகி நாராயணசாமி பிள்ளை அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர் துரை அர்ச்சுணன் மற்றும் கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் திருமூர்த்தி, அசோக்குமார், சுப்ரமணியன், சேகர், ஆனந்த், செந்தில்குமார் உள்ளிட்ட பலரின் முயற்சி காரணமாக, விநாயகர் கோவில் திருப்பணியை தொடர்ந்து, ஸ்ரீ மகா தி விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் நவகிரஹங்களுக்கான கும்பாபிஷேக விழா, வரும் ஜூன் 1ம் தேதி காலை 8 மணியளவில் நடக்கிறது.அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த சிவாச்சாரியார் செல்வ முத்துக்குமாரசாமி தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை முன்னின்று நடத்துகின்றனர்.கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை, துரை அர்ச்சுணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.