பதிவு செய்த நாள்
12
அக்
2020
02:10
பெண்ணாடம்; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு நாகா பரணம் காணிக்கை வழங்கப்பட்டது.பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில், அர்த்த மண்டபம் முன், பித்தளை உலோகத்திலான கதவு மற்றும் கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த ஜூன் மாதம் அர்த்த மண்டபத்தில் உள்ள கதவு, கற்படிகளுக்கு பஞ்சலோக தகடுகள் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ராஜேஷ் கண்ணன், அஸ்வினிதேவி தம்பதிகள், இவர்களது மகன் மித்திலேஷ்ராம், டாக்டர் தர்ஷிணி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பஞ்சலோகத்திலான நாகா பரணம் காணிக்கையை ஆலய அர்ச்சகரிடம் சமர்ப்பித்தனர்.பின்னர், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு நாகா பரணம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.