புரட்டாசி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2020 08:10
ராமநாதபுரம்; புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கொரோனா ஊரடங்கால் ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடவும், தர்ப்பணம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டதால் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை.இந்த நிலையில் புரட்டாசி அமாவாசையான நேற்று அதிகாலை முதல் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். எந்தவித முன் அறிவிப்பும் இல்லாத நிலையில் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக்னி தீர்த்த கடலுக்கு அருகே உள்ள சங்குமால் கடலிலும், ஓலைக்குடா கடல் பகுதியிலும் புனித நீராடினர். வீடுகளிலும், தங்கும் விடுதிகளிலும் பலர் புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் செய்தனர்.கூட்டம் அதிகரித்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் பக்தர்கள் திரண்டனர். தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.