நவராத்திரி பூஜைக்கு நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு ஏதாவது டிபன் தர வேண்டாமா! இங்கே கல்கண்டு பொங்கல், அரிசி சுண்டல், தேங்காய் சாதம் ஆகியவற்றை தயாரிக்கும் விதம் தரப்பட்டுள்ளது.
கல்கண்டு பொங்கல்
தேவையான பொருட்கள் அரிசி - 1 கப் பால் - 2 கப் கல்கண்டு - 1 கப் நெய் - 1/4 கப் தண்ணீர் - 21/2 கப் முந்திரிபருப்பு- தேவையான அளவு திராட்சை - தேவையான அளவு ஏலக்காய் - தேவையான அளவு செய்முறை: அரிசியை நன்றாகத் தண்ணீரில் கழுவி எடுக்கவும். பால், தண்ணீருடன் அரிசியைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் கல்கண்டை தனியாக தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கல்கண்டு கரைசலை வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும். வேக வைத்த அரிசியை கொதிக்கும் கல்கண்டு கரைசலில் நன்றாக கலக்கவும். அதில் நெய்யைச் சேர்க்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயைப் பொடி செய்து அதன் மீது துாவவும். அம்பிகையின் நைவேத்யத்திற்கு சூடான கல்கண்டு பொங்கல் ரெடி.