மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அனுமந்தராயன் கோவிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2020 05:10
கரூர்: க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட, குட்டக்கடையில் இருந்து, புன்னம் செல்லும் சாலையில், அனுமந்தராய பெருமாள் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜை நடக்கும். நேற்று முன்தினம், மூல நட்சத்திரத்தையொட்டி பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு வெண்ணை சாற்றப்பட்டது. துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.