Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுங்ஙல்லுார் அம்மா ஆப்ரேஷன் தேவையில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பத்ரகிரியாரின் ஞானப்புலம்பல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
05:10

‘‘‘ஆமை வருமார் கண்டு அடைந்து’
அடக்கம் செய்தால் போல்
ஊமை உருக்கொண்டு
ஒடுங்குவது எக்காலம்?’’
ஆமை உன்னைப் பார்த்தால் ஓடி விடும்; அதைப் போல ஆசை அடக்கினால் உயர்வாய்!

‘‘‘துாண்டு விளக்கு அணைய
தொடர்ந்து இருள்முன் சூழ்ந்தாற்போல’
மாண்டு பிழைத்து வந்த
வகை தெரிவது எக்காலம்?’’
விளக்கைத் துாண்டுமுன் இருள் இருக்கும். உன் உள்ளத்தைத் துாண்டினால் மன இருள் மறையும்.

‘‘‘துரியினில் மீன்போல்’ சுழன்று
மனம் வாடாமல்
ஆரியனத் தேடி
அடிபணிவது எக்காலம்?’’
வலையில் விழுந்த மீன் துடிக்கும். அதுபோல் ஆகாது வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்காதே.

‘‘‘காண்டத்தை வாங்கி
கருமேகம் மீண்டது போல்’
பாண்டத்தை நீக்கி
பரம் அடைவது எக்காலம்’’
உப்புநீர் கடல்நீர் (காண்டம்) அதை சூரியன் வாங்கி மழைநீர் படைக்கின்றான். அதுபோல் வாழ்ந்து காட்டு.

‘‘வம்படிக்கும் மாதருடன்
வாழ்ந்தாலும் ‘மன்னுபுளியம்
பழமும் ஓடும் போல்’
ஆவது இனி எக்காலம்?’’
பழுத்த புளி ஓட்டில் ஒட்டாது. அதுபோல வம்பு செய்பவருடன் ஒட்ட வேண்டாம்.

‘‘பற்றற்று ‘நீரில்
படர்தாமரை இலைபோல்’
சுற்றத்தை நீக்கி மனம்
துார நிற்பது எக்காலம்?’’
நீர் உயரும் போது தாமரை உயரும், அதுபோல் பணம் வரும் போது சுற்றமும் உறவாடத்தான் செய்யும்.

‘‘‘நீரில் குமிழி போல்’ நிலையற்ற
வாழ்வை விட்டு உன்
பேரில் கருணை வெள்ளம்
பெருக்கு எடுப்பது எக்காலம்?’’
நீர்க்குமிழி உடையும். அதுமாதிரிதான் வாழ்க்கை. அதற்குள் அடுத்தவர்க்குக் கருணை காட்டு.

‘‘எண்ணாத துாரம் எல்லாம்
எண்ணி எண்ணிப் பாராமல்
‘கண்ணாடிக்குள் ஒளிபோல்’
கண்டு அறிவது எக்காலம்?’’
கண்ணாடியில் பட்ட ஒளி பளிச்சிடும். அதுபோல நல்ல எண்ணங்களைப் ‘பளிச்’ சிடச் செய்க.


‘‘‘காந்தம் வலித்து இரும்பைக்

கவர்ந்து இழுத்துக் கொண்டது போல்’
பாய்ந்து பிடித்து இழுத்து
உன்பதத்தில் வைப்பது எக்காலம்?’’
காந்தமும், இரும்புமாக கலந்திட வேண்டும். நான் இரும்பு; கடவுளே காந்தம்.

‘‘சூதும் களவும் தொடர் வினையும்
கட்டிடக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு
உனை அடைவது எக்காலம்?’’
துருத்தியில் ஊதினால் தீ பிடிக்கும்; அப்படித்தான் சூதும் களவும் தீமை செய்யும்.

‘‘பட்டமற்றுக் காற்றினில்
பறந்தாடும் சூத்திரம்போல்
விட்டு வெளியாக
விசுவாசித்தல் எக்காலம்?’’
காற்றில் பட்டம் பறக்கும். அதைப்போல சுவாசம் தந்தவனை நேசிப்போம்.

‘‘இயங்கும் சராசரத்தில்
‘எள்ளும் எண்ணெயும்’ போல்
முயங்கும் அந்த வேதமுடிவு
அறிவது எக்காலம்?’’
எள்ளுக்குள் எண்ணை இருப்பது எந்த அளவு உண்மையோ அதுபோல என்னைப் படைத்தவனே என்னை ஆள்வதும் உண்மை.

‘‘மனதை ஒரு வில்லாக்கி
வான் பொறியை நாணாக்கி
எனது அறிவை அம்பாக்கி
எய்வது இனி எக்காலம்?’’
வில் – நாண் – அம்பு இது வேட்டைக்கு உதவும். மனம் – அறிவு இது வாழ்க்கைக்கு உதவும்.

‘‘‘கடத்துகின்ற தோணிதனைக்
கழைகள் குத்தி விட்டாற்போல்’
நடத்துகின்ற சித்திரத்தை
நான் அறிவது எக்காலம்’’
தோணியில் உள்ள மூங்கில் குத்தினால் தோணி ஓட்டை ஆகும். தண்ணீர் உள்ளே புகும். அதுபோல, மனதை கெட்ட எண்ணங்களால் ஓட்டை ஆக்காதே!


கூட்டில் அடைபட்ட புழு

குளவி உருக் கொண்டது போல்
வீட்டில் அடைபட்டு
அருளை வேண்டுவது எக்காலம்?
கொட்டக் கொட்ட புழு குளவி ஆகும். நல்லதை நினைக்க நினைக்க நல்லதே நடக்கும்.


கடலில் ஒளிந்து இருந்து

கனல் எடுத்து வந்ததுபோல்
உடலில் ஒளித்த சிவம்
ஒளி செய்வது எக்காலம்?
கடலுக்குள் இருந்து எழுந்து ஒளி தரும் நிலவு போல,  மனதுக்குள் இருந்து இறைவன் ஒளி தருகிறான். வழி காட்டுகிறான்.

கடைந்த வெண்ணெய்
மோரில் கலவாது – அது போல்
உடைந்த தமியேன்
உனைக் காண்பது எக்காலம்?
எடுத்த வெண்ணெய் மீண்டும் மோர் ஆகாது. அதுபோல பிறந்த நான் இனி எப்படிச் சேர்வேன், இறைவா.

அறிவை அறிவால் அறிந்தே
அறியும் அறிவுதனில்
பிரிவுபட நில்லாமல்
பிடிப்பது இனி எக்காலம்
அறிவை அறிவால் அறிவது போல, பிரிவுபட அறியாமல் ஒன்று சேர்த்துவிடு.


மீனை மிக உண்டு நக்கி

விக்கி நின்ற கொக்குபோல்
தேனை மிக உண்டு
தெவிட்டி நிற்பது எக்காலம்?
மீன் கிடைத்தால் கொக்கு மயங்கும். இறைவன் என்ற தேன் கிடைத்தால் எனக்கும் மயக்கம் வரும்.

எள்ளும் கரும்பும் எழுமலரும்
காயமும் போல,
உள்ளும் புறம் நின்று அது
உற்று அறிவது எக்காலம்?
எள்ளுக்குள் எண்ணெய், கரும்புக்குள் சர்க்கரை! மலருக்குள் வாசம். உடம்புக்குள் இறைவன்!

அன்னம் புனலை விடுத்து
அமிர்தத்தை உண்பது போல்
என்னை விடுத்து உன்னை
இனிக் காண்பது எக்காலம்?
பாலைப்பருகும் – அதில் கலந்து இருக்கும் தண்ணீரை ஒதுக்குவது அன்னத்தின் செயல். அதுபோல நல்ல எண்ணங்களை மட்டும் ஏற்க அருள் புரிவாய் இறைவா!

அந்தரத்தில் பூத்து அலர்ந்து
எழுந்த தாமரை போல்
சிந்தை வைத்துக் கொண்டு
தெரிசிப்பது எக்காலம்?
நீர் எந்த அளவு உயர்ந்தாலும், அந்த அளவு உயர்ந்து தாமரை மலரும். எந்த இடத்தில் இருந்தாலும் கடவுள் சிந்தனை உன்னை உயர்த்தும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar