பவுர்ணமியையொட்டி, கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் சிவபுரீஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று மாலை, சிவனுக்கு சிறப்பு அபி ?ஷகம் செய்து அன்னத்தால் அலங்காரம் செய்து பூஜை நடந்தது. சிவாயம், குளித்தலை, ஐயர்மலை, கோடங்கிப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* லாலாப்பேட்டை செம்போர்ஜோதீஸ்வரர் சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* பழையஜெங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில் அன்னாபி ?ஷகம் நடந்து, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.