மரக்காணம் : மரக்காணம் அருகே உள்ள பந்தாடு கிராமத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி காலை 8.00 மணிக்கு முதற்கால பூஜைகளாக கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஓமம், திரவியஓமம் நடந்தது.இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. பின் ஸ்ரீசர்வேஸ்வர் கோவில் கோபுர கலசத்திற்கு ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்துவைத்தனர்.மூலவர் சுயம்பு ஸ்ரீசர்வேஸ்வரர்அபிஷேக, ஆராதனை மற்றும் பூ அலங்காரத்தில் பக்தருக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை கிரிதாகோபால் குடும்பத்தினர் செய்தனர். கும்பாபிஷேகத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.