திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திண்டிவனம்– செஞ்சி சாலையிலுள்ள தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து குருபகவானுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 9.50 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா, அறங்காவலர் முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.