Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : நிதானம் தேவை மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
மீனம் : அமோக லாபம்
எழுத்தின் அளவு:
மீனம் : அமோக லாபம்

பதிவு செய்த நாள்

14 டிச
2020
05:12

பூரட்டாதி 4ம் பாதம் :  வரவிருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சிறப்பான நற்பலன்களை அடைய உள்ளோரில் மீன ராசிக்காரர்களும் அடங்குவர். இதுவரை ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் இடத்தில் அமர்ந்து தொழிலில் ஸ்திரத்தன்மையை அருளிய சனி பகவான் தற்போது லாப ஸ்தானம் ஆகிய 11ம் இடத்தில் அமர்ந்து செய்தொழிலில் லாபத்தினைத் தர உள்ளார். அடுத்து வரும் மூன்று ஆண்டு காலமும் சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். ‘சனி கொடுக்க எவர் தடுப்பர்’ என்ற வாசகத்திற்கான பலனை அனுபவ பூர்வமாகக் காண உள்ளீர்கள். ஜாதக பலம் சுமாராக உள்ளவர்கள் கூட சனி பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாகி வரவிருக்கும் மூன்று ஆண்டுகளும் பொருளாதார நிலையில் உயர்வினைக் காண்பார்கள் என்பது உறுதி.


நிதி : பொதுவாக ராசிக்கு 11ல் சனி வரும் சமயம் பல்வேறு வழிகளில் செல்வம் சேரும் என்பார்கள். தனலாபம், தான்ய லாபம் ஆகியன உண்டாகும். கடன் சுமை எதிர்பாராத வகையில் காணாமல் போகும். வெளியில் நிலுவையில் இருக்கும் பாக்கித்தொகைகள் வசூலாகும். வண்டி, வாகனங்கள், வீடு, மனை போன்ற அசையும், அசையாச் சொத்துக்கள் சேரும் நேரம் இது. நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது.

குடும்பம் : நெடுநாட்களாக தடைபட்டு வரும் சுபநிகழ்வுகள் இல்லத்தில் இனிதே நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்ப விவகாரங்களில் உங்களின் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறும். விரும்பிய உணவு வகைகளை குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தோரால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்களில் இருந்து வரும் சுணக்க நிலை மாறி உங்களின் துாண்டுதலால் உற்சாகமாகச் செயல்படுவார்கள்.


கல்வி :எழுத்துத்திறன் சிறப்பான முன்னேற்றம் காணும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் எழுத்துத்திறனின் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டிகள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் முன்னிலை வகிப்பார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பிரபலமடையும் யோகம் உண்டு.


பெண்கள் : திருமணத் தடை கண்டவர்கள், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் என எல்லோரும் தடை விலகி சுபம் நடக்கக் காண்பார்கள். கணவரின் பணிகளுக்கு உதவிகரமாய் செயல்பட வேண்டியிருக்கும். அவரது தொழில் முறையில் உங்களின் இணைவு விரைவான வெற்றியைப் பெற்றுத் தரும். முடிந்தவரை தனிமையைத் தவிர்த்து எங்கு சென்றாலும் வாழ்க்கைத்துணையுடன் செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவோடு பல்வேறு விஷயங்களை சாதிப்பீர்கள்.


உடல்நிலை: உடல்நிலையில் சில உபாதைகளை சந்திக்க நேரிடும். நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். காது, மூக்கு. தொண்டை சார்ந்த பகுதிகளில் உண்டாகும் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, யோகா முதலானவை உங்கள் ஆரோக்யத்திற்கு துணை நிற்கும்.
தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வினைக் காண்பார்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலைச் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவத் துறையினர், நீதித்துறையினர், ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்து அமோக லாபம் காண்பர். சுயதொழில் செய்து வருவோர் நிர்வாகத்திறன் அதிகரிக்கக் காண்பார்கள். தொழிற்சாலை அதிபர்கள் தொழிலாளிகளால் நன்மை காணும் நேரம் இது.
பரிகாரம் : ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற பொருளுதவியை செய்து வாருங்கள். லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டு வாருங்கள்.

உத்திரட்டாதி:  உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ள மீன ராசிக்காரர்களைப் பொறுத்த வரை நட்சத்திர அதிபதியாகிய சனி பகவான் 11ல் ஆட்சி பலத்துடன் அமர்வது மிகச் சிறப்பான அம்சமாகும். நீங்கள் எதிர்பாராத அளவில் நற்பலன்களைக் காண உள்ளீர்கள் என்றால் அது மிகையல்ல. சனி பகவான் சிறப்புப் பார்வையான மூன்றாம் பார்வையின் மூலம் உங்களின் ஜென்ம ராசியைப் பார்க்க உள்ளதால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் திடமாக சிந்தித்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் மனநிலை உண்டாகும். சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் இடத்தினை சனி பார்ப்பதால் சிந்தனையில் தெளிவு பிறப்பதோடு எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். ராசி அதிபதி குருவும் நீச பலத்துடன் 11ல் ஆட்சி பெற்ற சனியுடன் இணைந்திருப்பதால் 2021 நவம்பர் வரை நீச பங்க ராஜ யோகத்தினைக் காண்பீர்கள்.


நிதி : சனி லாப ஸ்தானம் ஆகிய 11ம் இடத்தில் ஆட்சி பலத்துடன் அமர உள்ளதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சனி பகவானால் கிடைக்கப் பெறும் தனலாபம் ஸ்திரத்தன்மை வாய்ந்தது என்பதால் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். வீடு, மனை, நிலம், ஆகியவை சேரும் நேரம் இது. குரு, சனியுடன் சுக்ரன் இணையும் காலத்தில் வீட்டினில் புதிய பட்டாடைகள், ஆபரணங்கள் சேரும். அதே நேரத்தில் கள்வர் பயம் என்பதும் இணைவதால் மதிப்பு மிக்க பொருட்களை வங்கி லாக்கர்களில் சேமித்து வைப்பது உத்தமம்.


குடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். குடும்பத்தினருடன் தொலைதுார சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோருக்கு உதவுவதன் மூலம் மன நிம்மதி கண்டு வருவீர்கள். முன்னோர்களின் சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள். தாயார் வழி உறவினர்களால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரலாம்.  

கல்வி : உங்களது எழுத்தின் வேகமும், தேவையான குறிப்புகளுடன் துல்லியமாக விடையளிக்கும் பாங்கும் அதிகரித்து சிறப்பான மதிப்பெண்களைப் பெற கிரஹ நிலை துணை நிற்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டிகள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் முதலிடம் பிடிப்பார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பெருமையடையும் யோகம் உண்டு. சட்டம் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி, அக்கவுண்டன்சி, காமர்ஸ், கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.


பெண்கள் : வீட்டினில் உங்களது விருப்பத்திற்கிணங்க தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் சேரும். வைர நகை வாங்க காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தனி கவனம் செலுத்தி வருவீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது பணி மிகுந்த முக்கியத்துவம் பெறும். வாழ்க்கைத்துணைவரின் பணிகளுக்கு பக்கபலமாய் துணை நின்று செயல்பட வேண்டியிருக்கும். குடும்பப் பெரியவர்களிடம் நற்பெயர் காண்பீர்கள்.


உடல்நிலை: உடல்நிலை சீராக இருந்துவரும். ஆயினும் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஒரு சில உபாதைகளால் அவதிப்பட நேரிடும். தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடலாம். ருசியான தின்பண்டங்களையும், எண்ணை பலகாரங்களையும் முடிந்த வரை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.

தொழில் : உத்யோக ரீதியாக இடமாற்றத்தினை சந்திக்க நேர்ந்தாலும் ஸ்திரத்தன்மையை விரைவில் காண்பீர்கள். கடந்த சில வருடங்களாக தன்னலம் கருதாது உழைத்ததன் பலனாக பதவி உயர்வினைக் காண உள்ளீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலைச் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவத் துறையினர், நீதித்துறையினர், ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. விவசாயிகள் பணப்பயிர்களின் மூலம் அதிக லாபம் காண்பார்கள்.


பரிகாரம் : சுவாமி ஐயப்பனை வணங்கி வாருங்கள். பிறந்தநாள், திருமண நாள் போன்ற நாட்களில் அருகிலுள்ள ஐயப்பன் கோவிலில் அன்னதானம் செய்யுங்கள்.

ரேவதி: பொதுவாக பதினோராம் வீட்டினில் சனி அமரும் காலத்தே பிரபல்ய யோகத்தினைத் தருவார். ஆதியில் ஜனன ஜாதகத்தில் சனியின் பலம் பொருந்தியவர்கள், தசாபுக்தி வலிமையாகக் கொண்டவர்கள் மிகுந்த பிரபலம் அடைவார்கள். சமூகசேவை, ஆன்மிகத் தொண்டு ஆகியவற்றில் நாட்டம் செல்லும். நல்ல யோகம் உடைய ஜாதகர்களுக்கு உயர்பதவியில் உள்ளோருடன் தொடர்பு உண்டாகும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய ஆலோசனையின் மூலம் அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். இதனால் தனிப்பட்ட முறையில் உங்களுடைய கவுரவம் உயரும். 11ம் இடம் என்பது லாப ஸ்தானம் மட்டுமல்ல, செயல் வெற்றியைக் குறிக்கும் ஸ்தானமும் கூட. அதே போன்று நினைத்த காரியம் கைகூட 11ம் இடம் வலுப்பெற்றிருக்க வேண்டும். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளும் அப்பேற்பட்ட வலுவான இடத்தில் சனி பகவான் வந்து அமர்வதால் நினைத்த காரியம் உடனடியாக நடக்கக் காண்பீர்கள்.


நிதி : பொருள் வரவிற்கு  தடையேதும் இல்லை. பொருளாதார நிலையில் லேசான சிரமத்தினைத் தவிர குறிப்பிடத்தக்க சிரமமான சூழ்நிலை ஏதும் வராது. வழக்கு வியாஜ்ஜியங்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே சமாதானத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. புதியதாக சொத்துக்கள் வாங்கும்போது அவற்றினுடைய மூலப் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ்கள் போன்ற முறையான ஆவணங்களை சரிபார்த்து வாங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தவும். சொகுசு வசதி மிகுந்த வாகனங்களை வாங்க ஏற்ற காலமாக அமையும். நேரம் நன்றாக இருந்தாலும் கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

குடும்பம் : உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். அவர்கள் வகையில் நடைபெற உள்ள சுபநிகழ்ச்சிகளுக்கு மூலகாரணமாக நீங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து சேரும். பிள்ளைகளின் மந்தமான செயல்பாடுகளைப் போக்க அதிக முயற்சி எடுத்துக்கொள்வீர்கள். அவர்களின் எதிர்கால வாழ்விற்காக சொத்து சேர்ப்பினில் ஈடுபடுவீர்கள். தாய்மாமன் வழி உறவினர்கள் பிரச்னை ஏற்படுத்துவார்கள். சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உள்ளாகும்.


கல்வி : இன்டெர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் கல்வி நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். ஆன்லைன் வகுப்பினில் உங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். போட்டியாக இருக்கும் மாணவர்களை உங்களது ஞாபக சக்தியின் துணையுடன் எளிதாக வெற்றி கொள்வீர்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். ஆய்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான சூழ்நிலை காணாமல் போகும். கம்ப்யூட்டர் துறையில் பயிலும் மாணவர்கள் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.


பெண்கள் : பணம் சார்ந்த விவகாரங்களில் முன்பின் தெரியாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் தகுந்த துணையுடன் செயல்படுவது நல்லது. அவ்வப்போது மனதில் லேசான சந்தேகங்கள் தலைதுாக்கும். மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை நம்பி குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு கொள்வது நல்லது அல்ல. பெற்றோர், உடன்பிறந்தோர் உங்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பார்கள். பொறுப்புகள் என்று வந்துவிட்டால் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.


உடல்நிலை: சர்க்கரை வியாதிக்காரர்கள், உடலில் கொழுப்புசத்து மிக்கவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உடல்நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும். வாய்ப்புண், பல்வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடலாம். முருங்கைக் கீரையும், அகத்திக்கீரையும் உங்கள் உடலுக்கு மேலும் வலு சேர்க்கும்.


தொழில் : அதிகம் அலையாமல் அலுவல் பணிகளை உடன்பணிபுரிவோரின் துணையுடன் சாதித்துக்கொள்வீர்கள். 2021 ஜூன் மாத வாக்கில் உத்யோக ரீதியாக இடமாற்றம் உண்டாகும். ஆயினும் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகள் அலைச்சலை சந்தித்தாலும் குறிப்பிடத்தகுந்த தன லாபத்தினை அடைவார்கள். மளிகை பலசரக்கு வியாபாரிகள், உணவு சார்ந்த தொழிலைச் செய்து வருபவர்கள் ஏற்றமான நிலையினைக் காண்பார்கள். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் பணி செய்து வருவோர் தங்கள் உத்யோகத்தில் ஸ்திரத்தன்மை உண்டாகக் காண்பர். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். திறமையும் உழைப்பும் உடைய உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தையும் தருவதால் வாழ்வினில் புதிய உச்சத்தினைத் தொடுவீர்கள் என்பது உறுதி.


பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாருங்கள். காமதேனு வழிபாடு, புதனன்று விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சுஉங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி ... மேலும்
 
temple news
கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றிசகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar