Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை)
மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
எழுத்தின் அளவு:
மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

04 மார்
2026
10:03

அசுவினி: செலவு அதிகரிக்கும்

உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரித்து வந்த நிலையில், மார்ச். 6. 2026 அன்று விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சஞ்சரிக்கப்போவதால் இக்காலம் ஏழரை சனியின் தொடக்க காலமும் விரய சனியின் காலமும் ஆகும் என்பதால் பொருளாதார நெருக்கடி, வீண் செலவுகள், எதிரிகளால் இடையூறு, உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலம் முழுவதும் தன்னுடைய நட்பு வீட்டிலும், தன்னுடைய நட்பு கிரகங்களான குரு, புதன் சாரத்திலும், தன்னுடைய சுய சாரத்திலும் சனி பகவான் சஞ்சரிப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் நெருக்கடிகள் நீங்கும். நன்மைகள் நடக்கும். சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப பலன்கள் நன்மைகளாகும்.

பலன்களில் மாற்றம்
விரய சனியின் காலம் மார்ச். 6, 2026 - ஏப். 24, 2028 என்றாலும், இக்காலம் முழுவதும் அவர் வழங்கும் பலன்கள் ஒரே மாதிரியாக இருக்காது, மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு சனி பகவான் செல்வதால் இக்காலத்தில் அவரால் ஏற்படும் சங்கடமான பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வீண் செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு லாப ஸ்தானமான கும்பத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், ராகுவால் பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். 
நவ.13, 2026 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச்செல்வது அவசியம். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

குரு சஞ்சாரம்
மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிப்பார். இக்காலங்களில், மிதுனத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு வாழ்க்கைத்துணை அமையும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனிக்கு குருப்பார்வை உண்டாவதால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். குழந்தை பாக்யம் உண்டாகும். 

பொதுப்பலன்
விரய சனியின் காலம் என்றாலும், நவ,13, 2026 வரை லாப ராகுவும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானுக்கு குருப்பார்வையும், சிம்ம குருவின் காலமும், குருப்பார்வைகளும் மலைபோல்வரும் சங்கடத்தையும் வந்தவழி தெரியாமல் செய்துவிடும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொன், பொருள், வீடு, வாகனம், என்ற கனவுகள் நனவாவாகும்.

தொழில்
தொழில்காரகன் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், லாப ஸ்தானமான 11ம் இடத்தில் நவ.13, 2026 வரை ராகு சஞ்சரிப்பதும், குரு பகவானின் பார்வைகளும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி இறக்குமதி, எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம்,ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மருத்துவ துறைகள் லாபம் தரும். விவசாயம் முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடி விலகும் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். குடும்பத்தினரை ஆலோசிக்காமல் எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்புகள் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற நட்புகளையும் சிந்தனைகளையும் ஒதுக்கி வைப்பதால் உயர் கல்வி கனவு நனவாகும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தினால் பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

உடல்நிலை
உழைப்பின் காரணமாகவும், பரம்பரை மற்றும் பருவ நோய்களாலும் உடல் நிலையில் எதிர்பாராத சகடங்கள் ஏற்படும். மருத்துவச்செலவு அதிகரிக்கும் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் உங்களை அச்சமூட்டி வந்த நோய்களும் மருத்துவத்தால் குணமடையும்.

குடும்பம்
விரய சனியின் 3ம் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் குடும்பத்தினர் நடந்துகொள்ளாமல் போவார்கள். பண விவகாரத்திலும் நெருக்கடி ஏற்படும். திட்டமிடாமல் செலவு செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள் என்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். குருவின் பார்வைகளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.


பரணி: முயற்சிக்கேற்ற ஆதாயம்


சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் இடத்தில் இதுவரையில் சஞ்சரித்து, பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும், உங்கள் ராசியையும், பூர்வ புண்ணியம் மற்றும் அஷ்டம ஸ்தானங்களையும் பார்த்து வந்ததால் செயல்களில் தாமதம், மனதில் குழப்பம், பிள்ளைகளால் சங்கடம், செல்வாக்கில் பின்னடைவு, நோய் நொடி என்ற சங்கடத்திற்கு ஆளாகி வந்திருப்பீர்கள். இந்த நிலையில் மார்ச். 6. 2026 அன்று விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இக்காலம் உங்களுக்கு விரய சனியின் காலம் என்பதால் எடுக்கும் வேலைகளில் தடையும், வருமானத்தில் நெருக்கடியும், வீண் அலைச்சல், மன உளைச்சல் என்று ஏற்படுவதுடன் வீண் செலவுகள், எதிரிகளால் இடையூறு, உடல்நிலையில் சங்கடம், தொழிலில் போராட்டம், பெரியோரின் கோபம் என்ற நிலைக்கு ஆளாகலாம் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
விரய சனியின் காலம் மார்ச். 6, 2026 - ஏப். 24, 2028 என்பதால் இக்காலம் முழுவதும் அவரால் உங்களுக்கு ஒரே மாதிரியான பலன்களை மட்டும் வழங்க முடியாது, மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு சனி பகவான் செல்வதால், அஸ்தமன காலங்களிலும், வக்கிர காலங்களிலும் விரய சனியின் சங்கடப் பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு என்பது இல்லாமல் போகும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். பொன் பொருள் சேரும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான கும்பத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில், வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வராமல் இருந்த பணம்வரும்.  சேமிப்பு உயரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 
நவ.13, 2026 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் இடமான மகரத்திலும், கேது 4ம் இடமான கடகத்திலும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். தாயார் உடல்நிலையிலும் உங்கள் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இக்காலங்களில், மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண வயதினருக்கு திருமணம், துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம், எதிர்பார்த்த வேலை, புதிய தொழில்,  செல்வம் செல்வாக்கு என்ற நிலை உருவாகும். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனியின் பாதிப்புகள் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம் லாபம்தரும். உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குழந்தை பாக்யமும் பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

பொதுப்பலன்
விரய சனியின் காலம் என்றாலும், சனி சஞ்சரிக்கும் நட்சத்திரங்கள் அவருக்கு நட்பானவை என்பதுடன், உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரனுக்கும் சனி நட்பானவர் என்பதால் கடும் நெருக்கடிகளை சனி உங்களுக்கு ஏற்படுத்த மாட்டார்.  நவ,13, 2026 வரை லாப ராகுவும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் குருப்பார்வை சனி பகவானுக்கு கிடைப்பதும், சிம்ம குருவின் காலமும், குருப்பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும். குடும்பத்தில் நிம்மதி. தொழிலில் ஆதாயம். வேலையில் எதிர்பார்த்த மாற்றம். புதிய தொழில், வீடு, மனை, வாகனம் என்று சேரும். உடல்நிலை சீராகும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும்.

தொழில் உங்களுக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியும் சனி பகவான் என்பதால் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். லாப ஸ்தானமான 11ம் இடத்தில் நவ.13, 2026 வரை ராகு சஞ்சரிப்பதும், குரு பகவானின் பார்வைகளும் தொழிலில் தடையற்ற நிலையை உண்டாக்கும். ஆடை ஆபரணம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், நிதிநிறுவனம், ரியல்எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருந்தகம், உணவகம், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றமடையும். சினிமா, தொலைக்காட்சி, யூட்யூப் வளர்ச்சி அடையும். கலைஞர்கள் ஆலோசகர்கள் முன்னற்றம் காண்பர்.

பணியாளர்கள்
எடுத்த வேலையை முடிப்பதில் முதன்மையானவராக இருக்கும் உங்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு தொடரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தின் மீது அக்கறையும், திறமையான செயல்பாடும் கொண்ட உங்களுக்கு விரய சனி எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்துவார். தொடர் உழைப்பின் காரணமாக ஓய்வு உறக்கமில்லா நிலையை உண்டாக்குவார் என்றாலும், நினைத்ததை சாதிப்பீர்கள். கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். தவறானவர்களை உங்கள் நட்பில் இருந்து ஒதுக்குவீர்கள்.  குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்வர் என்பதால் வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பும், உங்களுக்கேற்பட்ட எதிர்ப்பும் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய காலமிது. வகுப்பறையில் மட்டும் அல்லாமல் மற்ற நேரங்களிலும் உங்கள் சிந்தனையை படிப்பின் மீது செலுத்துவது நன்மையாகும். தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பதால் உயர் கல்வி கனவு நனவாகும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

உடல்நிலை
விரய சனி உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார், உறக்கத்தை கெடுப்பார், மருத்துவ செலவை அதிகரிப்பார் என்பது பொது விதி என்பதால் பரம்பரை நோய்களும், பருவ நோய்களும் அவ்வப்போது தலைக்காட்டும் என்றாலும், ருண ரோக ஸ்தானத்தை ஆயுள் காரகனான சனி பகவான் பார்ப்பதால் உங்களுக்கு வரும் நோய்கள் மருத்துவத்தால் குணமடையும்.

குடும்பம் குடும்பம் மற்றும் பாக்ய ஸ்தானங்களுக்கு சனி பகவானின் பார்வைகள் கிடைப்பதால் குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும். பெரியோருடன் இணக்கமற்ற நிலை உண்டாகும் என்றாலும், ராகுவின் சஞ்சாரமும் குருப் பார்வைகளும் வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதியை உண்டாக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவை நனவாக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமண முயற்சிகளை வெற்றியாக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையை உண்டாக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தும்.

பரிகாரம்: பைரவரை வழிபட வாழ்வில் உண்டாகும் சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


கார்த்திகை: யோக காலம்


ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார்.
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு சனி பகவான் விரய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் செலவையும், அலைச்சலையும், உடல் நலிவையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாபத்தையும், யோகத்தையும் வழங்குவார் என்பது பொதுப்பலனாகும். ஆனால், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் விரய சனியின் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் லாப சனியால் ஏற்படும் பலன்களில் சிறிய தடைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ற ஆதாயமும், சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் அதனால் யோகப்பலன்களும் உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு லாப ஸ்தானத்திலும், கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்.
நவ.13, 2026 முதல் ராகு ஜீவன ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ, 13, 2026 வரை யோகப்பலன்கள் அதிகரிக்கும். விரய சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். நவ.13, 2026 முதல் ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதனால் நவ. 13, 2026 முதல் சர்ப்ப கிரகங்கள் லாபத்தை வழங்குவர். முயற்சியை வெற்றியாக்குவர். முன்னேற்றத்தை உண்டாக்குவர்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக
1ம் பாதத்தினருக்கு, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். வேலைக்காக எடுக்கும் முயற்சியை சாதகமாக்குவார். புதிய தொழில், சமூகத்தில் அந்தஸ்து என்ற நிலையை உருவாக்குவார். கடகத்திலும், கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் விரய சனியின் பாதிப்புகளை விலக்குவார். உத்தியோகம், தொழிலில் நிம்மதியை ஏற்படுத்துவார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செல்வாக்கை அந்தஸ்தை உயர்த்துவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானம் அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாசல், ஆடை ஆபரணம் என்று சேரும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை, தொழில் என்ற கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்

பொதுப்பலன்
திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம், தொழில் லாபம்தரும். கையில் பணம் புழங்கும். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் கை கூடிவராத வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில், உடல்நிலை சீராகும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.

தொழில் 
தொழில் காரகன் சனி சஞ்சாரத்தால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்களும் முன்னேற்றம் அடையும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர்ஸ், அலைபேசி, ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். சினிமா, சின்னத்திரை, யூட்யூப், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு ஆதாயம் கூடும்.

பணியாளர்கள்
கௌரவக்குறைவு ஏற்படும் இடத்தில் இருக்க விரும்பாத உங்களுக்கு மீன சனியின் காலம் யோக காலமாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். மெமோ, வேலையில் பிரச்சனை, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் கல்வி, எதிர்காலம் என்று உங்கள் மனம் சிந்திக்கும். ஆசிரியர்கள் வழங்கும் ஆலோசனையை  பயன் தரும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்

உடல்நிலை
ஆயுள் காரகன் சனியால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீண்டநாட்களாக வாட்டி வதைத்து வந்த நோய்களும் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். ஆரோக்யமாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்படத் தொடங்குவீர்கள்

குடும்பம் 
வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிப்பதுடன், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உயர்வு உண்டாகும் என்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமண முயற்சி வெற்றியாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை) »
temple news
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
உத்திரம்: எச்சரிக்கை அவசியம்ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar