பதிவு செய்த நாள்
04
மார்
2026
11:03
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்கு
ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதிக்கு சனி நட்பானவர் என்பதுடன் அவர் சஞ்சரிக்கப்போகும் ராசியும் குருவினுடைய மீன ராசி என்றாலும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கக் கூடியவராகிறார். புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் 10 ம் வீட்டிற்குரிய உத்தியோகம் தொழில் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அனைத்திலும் அக்கறையை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் போராட்டம் முடிவிற்குவரும். எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். அனைத்திலும் யோகம் உண்டாகும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் விலகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை, திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் சில மாற்றம் ஏற்படும்.
பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் ஜீவன சனியால் ஏற்படும் சங்கடப் பலன்கள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகத் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். 4ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் பாக்ய சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ராகு - கேது சஞ்சாரம்
புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ராகு பாக்ய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், நினைத்த வேலைகள் நடந்தேறும். விஐபிகள் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வீடு, வாசல் என்ற கனவு நனவாகும். நவ. 13, 2026 முதல் ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, வரவில் தடை, தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்.
4ம் பாதத்தினருக்கு
நவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும், நவ.13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ராகு கேதுவால் எதிர்மறையான பலன்களே ஏற்படும்.
குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2,3ம் பாதத்தினருக்கு, மிதுனத்திலும் சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். படிப்பு, உத்தியோகம், சுய தொழில் என்ற கனவு நனவாகும். 4 ம் பாதத்தினருக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் யோகப்பலன்கள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கடன்கள் அடைபடும். உடல்நிலை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும்.
பொதுப்பலன்
எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். அவமானங்களை சந்தித்து வந்த நிலைமாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். பொன், பொருள், வீடு, வாகனம் சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும்.
தொழில்
தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., அலைபேசி, ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி தொழில்கள் எதிர்பார்த்த லாபத்தை தரும்
பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் மரியாதையான பொறுப்பும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்படுவது அவசியம். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை உண்டாகும்.
பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் உயர்வு கிடைக்கும்.
கல்வி
பொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். தவறான நட்புகளை விட்டு விலகுவதால் உயர் கல்வி என்ற உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்.
உடல்நிலை
உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று ஏற்பட்ட செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என்று அவதிப்பட்டு வந்தநிலை மாறும். வயதானவர்களுக்கு மனதில் இருந்த பயம் விலகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.
குடும்பம்
குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். புதிய இடம் வீடு வாகனம் என்று சேரும். பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். அவர்களால் பெருமை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்:இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.
கர்மக்காரகன் சனி, மனக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, உங்கள் நட்சத்திராதிபதியும் நீதிமானுமான சனி பகவான் இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கியதுடன் உடல்நிலையில் கோளாறு, பொருளாதாரத்தில் நெருக்கடி, வம்பு வழக்கு அவமானம் என்று படாதபாடு படுத்தி வந்த நிலையில், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான மீன ராசியில் நட்பாக சஞ்சரிக்கப்போகிறார் என்பதால், இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும். 12 ராசிகளில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மட்டும்தான் பார்க்கும் இடங்களுக்கும் நற்பலன்களை வழங்கிடுவார் என்பதால் இக்காலத்தில் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். களவுபோன பொருள் கிடைக்கும். சேமிப்பு உயரும் என்பதுடன், பாக்ய சனியின் பார்வைகள் உங்கள் ராசிக்கு 3,6,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு உயரும். வம்பு வழக்குகள் சாதகமாகும். நோய்நொடிகள் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும்.
பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் பாக்ய சனியால் கிடைத்து வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகங்கள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். படிப்பினைகளை உண்டாக்குவர்.
குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் விரயச்செலவுகள் அதிகரிக்கும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம், குழந்தை பாக்யம், வீடு வாசல், உயர்கல்வி என்ற கனவுகள் நனவாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணவரவு, குடும்பத்தில் நிம்மதி,
வேலை, தொழில், வசதி வாய்ப்பு என்ற நிலை உருவாகும்.
பொதுப்பலன்
பாக்ய சனியும் அவருடைய பார்வைகளும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் செல்வாக்கை உயர்த்தும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். வரவை அதிகரிக்கும். வம்பு வழக்குகளில் சாதகமான நிலையை உண்டாக்கும் புதிய சொத்து வாகனம் என்ற கனவை நனவாக்கும். வேலையிலும் தொழிலிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தியாக்கும்.
தொழில்
தொழில்காரகன் சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். முடங்கிக்கிடந்த தொழில்களும் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். போட்டி எதிர்ப்பு என்றிருந்த நெருக்கடிகள் நீங்கும். இயந்திரத் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி., வெளிநாட்டு வர்த்தகம், டிராவல்ஸ், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஹார்டுவேர், ஜுவல்லரி, தொழில்கள் லாபம்தரும்.
பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். ஊதிய உயர்வுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.
பெண்கள்
நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். படிப்பு, வேலை, திருமணம், சொத்து என்று அவரவர் தேவைகேற்ற ஒவ்வொன்றும் கிடைக்கும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும் குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
கல்வி
படிப்பில் இருந்த மந்த நிலையும் கவனக்குறைவும் விலகும். பொதுத்தேர்விலும் போட்டித்தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியிலும் பாடப்பிரிவிலும் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
ஆயுள்காரகனின் பார்வை ருண ரோக ஸ்தானத்திற்கு உண்டாவதால் மருத்துவமனையே கதியாக இருந்தவர்களும் படுத்த படுக்கையாக இருந்தவர்களும் சுறு சுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த இன்னல்கள் பிரச்சனைகள் எல்லாம் விலகும். மகிழ்ச்சியான நிலை உண்டாகும். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என்ற கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்:திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.
ஆயில்யம்:வெற்றிமேல் வெற்றி
வித்யாகாரகன் புதன், மனக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்வில் எல்லையற்ற நெருக்கடிகளையும், போராட்டங்களையும், உடல்நிலையிலும் மனநிலையிலும் சங்கடங்களையும், வம்பு வழக்கு அவமானம் என்றும் உங்களை அவதிக்கு ஆளாக்கி வந்த சனி பகவான் மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான மீன ராசியில் நட்பாக சஞ்சரிக்கப்போகிறார். சனி பகவான் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போதுதான் 3,6,11 ம் இடங்களைப் பார்ப்பார். அந்த இடங்களுக்கும் யோகப்பலன்களை வழங்குவார் என்பதால் உங்கள் வாழ்வில் இனி வெற்றிமேல் வெற்றிதான். எடுக்கும் வேலையெல்லாம் இனி வெற்றியாகும். நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும். இழந்ததை எல்லாம் மீட்க முடியும். எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். மற்றவர் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலைமாறும். விரும்பிய யாவும் இக்காலத்தில் உங்கள் கைக்கு வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகப்பயணமும் மேற்கொள்வீர்.
பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் பாக்ய சனியாலும் அவருடைய பார்வைகளாலும் கிடைத்து வந்த யோகப்பலன்களில் மாற்றம் ஏற்படும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஆதாயம், முன்னேற்றம் உண்டாகும்.
ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரித்து, நவ.13, 2026 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சனி பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் ராகு கேது வழங்கும் பலன்கள் சாதகமாக இருக்காது.
குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 - ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் கையிருப்பை வைத்து இடம் வீடு வாகனம் வாங்குவதுடன் ஆடம்பரச் செலவுகளும் செய்வீர்கள். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
வேலைத்தேடுபவர்களுக்கு வேலை, புதியதொழில், வசதி வாய்ப்பு என்று வாழ்க்கை வளமாகும்.
பொதுப்பலன்
பாக்ய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் என்பது 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு உண்டாகப்போகும் யோக காலமாகும். இக்காலத்தில் வாழ்க்கைக்குரிய வீடு, வாசல், வேலை, தொழில், திருமணம், குழந்தை, பொன் பொருள், பணம் என்ற நிலை உண்டாகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வம்பு வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
தொழில்
செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் முடிவிற்குவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி வருமானம் காணும். பால்பண்ணை. நிதிநிறுவனம். எக்ஸ்போர்ட். காலண்டர். டைரி. நோட்டுப்புத்தகம் தயாரிப்பு. செய்தித்தாள். ஐ.டி. துறை. வெளிநாட்டு வர்த்தகம். குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள். மினரல் வாட்டர். ஹார்டுவேர். ஷேர் மார்க்கெட். சின்னத்திரை. வலைதளம். தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
திறமைக்குரிய மதிப்பில்லை உழைப்பிற்கேற்ற உயர்வில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். நிர்வாகம் உங்களைப் புரிந்து கொண்டு எதிர்பார்த்த சலுகைகளையும் புதிய பொறுப்பையும் வழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இழுபறியாகவே இருந்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
பெண்கள்
புத்திசாலித்தனத்தை மூலதனமாக கொண்டு முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு இக்காலம் யோக காலமாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கருத்து வேறுபாடு மற்றும் வேலையின் காரணமாக கணவரை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் ஒன்றாவீர். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
கல்வி
வித்யாகாரகன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட்டு வருவதால் பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளுக்கு தயாராவீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விருப்பப்பட்ட கல்லூரியில் சேர முடியும். சிலர் மேற்படிப்பிற்காக கடல் கடந்தும் செல்வீர்கள்.
உடல்நிலை
அஷ்டம சனியின் காலத்தில் உடல்நிலையில் பாதிப்பை சந்தித்தவர்களுக்கும், நரம்புக்கோளாறு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு, விபத்தினால் செயல்பட முடியாத நிலையில் இருந்தவர்களுக்கும் இக்காலத்தில் மாற்றம் ஏற்படும். சீரான சிகிச்சையால் குணமடைந்து நலமுடன் வாழ்வீர்கள்.
குடும்பம்
இக்காலம் உங்களுக்கு பொற்காலமாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். மனதில் நிம்மதி ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டுவர நன்மைகள் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும்.