இளைஞன் ஜோஸ்வி ஜாகிங் போய் கொண்டிருந்ததான். பின்னால் ஜாகிங் வந்த ஒருவர் அவனைக் கடந்தார். தான் முந்த வேண்டும் என வேகமாக ஓடத் தொடங்கிய ஜோஸ்வி அவரை முந்தினான். பெருமிதத்துடன் திரும்பி பார்த்த போது, அவரது மெதுவாக போய்க் கொண்டிருந்தார். தன்னுடன் அவர் போட்டியிடவில்லை என்ற உண்மை புரிந்தது. இதைப் போலவே நம்முடன் வேலை பார்ப்பவர்கள், அண்டை வீட்டார், நண்பர், உறவினர் என அனைவரையும் போட்டியாக கருதுகிறோம். ‘ நானே பெரியவன்’ என எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என பணம், நேரத்தை வீணாகச் செலவிடுகிறோம். இதனால் ஒரு கட்டத்தில் பிறருக்கு தீங்கு செய்யவும் துணிகிறோம். இந்த மனநிலை ஏற்பட்டால் திருந்துவது கடினம். யாரையும் போட்டியாக கருதாதீர்கள். எல்லோரையும் துரத்துவதே குறிக்கோள் என உங்களின் சொந்த வாழ்வை இழக்காதீ்ர்கள்.