இளவரசனான ஹாரூன் சீடனாக சேர வேண்டும் என ஒருமுறை நாயகத்திடம் வந்தார். ‘‘ஹாரூன்... உனக்கு பிடித்த விளையாட்டு எது’’ எனக் கேட்டார். ‘‘சதுரங்கம்’’ என்றான் அவன். தன் சீடர்களில் ஒருவரை சதுரங்க அட்டையுடன் வரச் சொன்னார். அந்த சீடருக்கு விளையாடத் தெரிந்தாலும், அதன் நுணுக்கம் தெரியாது. இந்நிலையில் வந்த சீடரிடம், ‘‘ இந்த போட்டியில் நீ தோற்றால் சீடராக தொடர முடியாது’’ என அதிர்ச்சியளித்தார். இளவரசனிடம், ‘‘நீ தோற்றால் உன்னை சீடனாக ஏற்க மாட்டேன்’’ எனத் தெரிவித்தார். இளவரசன் அருமையாக விளையாடவே அவனது வெற்றி நிச்சயமாகி விட்டது. ஆனாலும் சீடர் ஏதும் பேசாமல் இயல்பாக இருந்தார். இளவரசன் மனதிற்குள், ‘இந்த நல்ல மனிதரின் இறைப்பயணம் என்னால் வீணாகப் போகிறதே’ என்ற கவலை ஏற்பட்டது. வேண்டுமென்றே காய்களை தவறாக நகர்த்த தொடங்கினான் இளவரசன். உடனே காய்களை கலைத்த நாயகம், ‘‘இருவரும் போட்டியில் வென்று விட்டீர்கள்’’ என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தினார். இதனால் இருவரும் சீடர்களாக தொடர்ந்தனர்.