சேதி நாட்டு இளவரசியான தமயந்தியை தேவர்கள் மணம்புரிய விரும்பிய நிலையில், நிடத நாட்டு மன்னன் நளன் திருமணம் செய்தான். கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரரின் உதவியை நாடினர். நளனின் மனஉறுதியை எடுத்துக்காட்ட ஏழரை ஆண்டுகள் சனீஸ்வரர் பீடித்தார். கட்டிய ஆடையைக் கூட இழந்து அவதியுற்ற நளன் எந்த இடத்திலும் மனம் கலங்கவில்லை. சிவத்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். நளனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சனீஸ்வரர் இங்கு தங்கினார். சனிக்குரிய திசை தெற்கு. ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எப்படி செல்வது: * காரைக்காலில் இருந்து 5 கி.மீ., * மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ., தொடர்புக்கு: 04368 - – 236 530