மன்னரான தினகரன் குழந்தை வரம் பெற விரதம் மேற்கொண்டார். ‘‘அந்தணச் சிறுவன் ஒருவன் உன் வீட்டுக்கு வருவான். அவனை வளர்த்து வா. பிறகு உனக்கும் குழந்தை பிறக்கும்’’ என அசரீரி கேட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு ‘சந்திரவதனன்’ என பெயரிட்டு வளர்த்தார். பின்னர் மன்னருக்கும் குழந்தை பிறக்க, ‘சதாகன்’ என பெயரிட்டார். எனினும் வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கு முடி சூட்டினார். இந்நிலையில் மன்னருக்கு ஏழரைச்சனி பிடித்தது. தந்தை மீது அன்பு கொண்ட சந்திரவதனன், இரும்பால் சனீஸ்வரர் உருவம் செய்து, ‘ உத்தமரான என் தந்தைக்கு தரும் துன்பத்தை எனக்கு கொடு’’ என்று வேண்டினான். சனீஸ்வரர் அவனது தியாகத்தைப் பாராட்டி, ஏழரை நாழிகை மட்டுமே பீடித்து விலகினார். சந்திரவதனன் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். இதனால் குச்சனுார் எனப்படுகிறது. சனீஸ்வரர் இங்கு லிங்க வடிவில் உள்ளார். எப்படி செல்வது: தேனியிலிருந்து 30 கி.மீ., தொடர்புக்கு: 97895 27068, 04554 – 247 285