பதிவு செய்த நாள்
18
டிச
2020
04:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், துணை கோயில்களான சொக்கநாதர் கோயில், அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், பழனி ஆண்டவர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, உதவி கமிஷனர் விஜயன், தெற்கு ஆய்வாளர் ஜெயலட்சுமி, கோயில் கண்காணிப்பாளர்கள் கர்ணன், அங்கயற்கண்ணி, தக்கார் பிரதிநிதி சுந்தரி முன்னிலையில் எண்ணப்பட்டன. ரூ. 29 லட்சத்து 3 ஆயிரத்து 771, தங்கம் 243 கிராம், வெள்ளி ஒரு கிலோ 690 கிராம் இருந்தன. கோயில் பணியாளர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஐயப்பா சேவா சங்கத்தினர் இதில் ஈடுபட்டனர்.