திருவாதவூரில் வைகாசி மாங்கொட்டை திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2012 11:05
சமயக்குரவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரை மேலூர் அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இங்குள்ள திருமறைநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெறும். வைகாசி மாதம் மாம்பழ சீசன் என்பதால் வழிநெடுக மாங்கொட்டைகள் கிடைக்கும். எனவே இந்த திருவிழாவை மாங்கொட்டை திருவிழா எனவும் அழைப்பார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா மே 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து மே 29ம் தேதி காலை 7மணிக்கு சுவாமியும், அம்மனும் திருவாதவூரில் இருந்து புறப்பட்டனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருமறைநாதர்-பிரியாவினையுடனும், மற்றொரு சப்பரத்தில் திருமறைநாயகி அம்மனும் புறப்பாடாகினர். திருவிழாவை முன்னிட்டு திருவாதவூர் திருமறைநாதர், பிரியாவிடை மேலூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.