நாகர்கோவில், : சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் மூலவராக விளங்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக மரபு படி பட்டாரியர் சமுதாயம் சார்பில் கொடிப்பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. காலை 9:00 மணிக்கு தெற்குமண் மடம் பிரதீபன் நம்பூதிரி கொடியேற்றி தீபாராதனை நடத்தினார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா சிறப்பு பூஜைகள் நடத்தினார்.தினமும் காலை, இரவில் சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. டிச.29 காலை 8:30 மணிக்கு தேரோட்டம், அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு சப்தாவர்ணம், டிச.30 அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5:00 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா, இரவு 9:00 மணிக்கு ஆராட்டு நடக்கிறது. தேராட்டம் நடைபெறும் டிச. 29ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.