ஆய்வு நோக்கில் சில மருத்துவர்கள் ஒரே வித நோய்க்கு ஆளான இருபது நபர்களைத் தேர்ந்தெடுத்தனர். முதல் பத்து நபர்களை ஓரிடத்திலும், அடுத்த பத்து நபர்களை வேறொரு இடத்திலும் சிகிச்சைக்காக தங்க வைத்தனர். முதல் பத்து நபருக்கு, சிறந்த முறையில் சிகிச்சை தரப்பட்டது. அதே சமயம் அவர்களிடம் கடுமையாக நடந்தனர். இதனால் நோயாளிகள் மருத்துவர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க கூட விரும்பவில்லை. வேறிடத்தில் தங்க வைக்கப்பட்ட பத்து நபர்களுக்கு சாதாரண முறையில் சிகிச்சை தரப்பட்டது. ஆனால் அவர்களிடம் மருத்துவர்கள் அன்புடன் நடந்தனர். கனிவாகப் பேசினர். ஓரிரு வாரங்களில் சிறப்பு சிகிச்சை பெற்றவர்களிடம் பெரிதாக முன்னேற்றம் ஏற்படாததோடு துாக்கமின்மை, பயம் போன்ற பிரச்னைகள் தலைதுாக்கியது. அதே சமயம் அன்புடன் நடத்தப்பட்ட நோயாளிகள் தேறியதோடு உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தனர். இந்த ஆய்வு மூலம் அன்பின் வலிமை நிரூபிக்கப்பட்டது. நாமும் நம்மைச் சார்ந்தவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வோம். ‘‘அன்பில்லாதவன் ஆண்டவனை அறிய முடியாது. தேவன் அன்பாகவே இருக்கிறார்’’ என்கிறது பைபிள்.