காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் சாலையில் 11 கி.மீ தொலைவில் பாலுசெட்டிசத்திரம் உள்ளது. இங்கிருந்து காவிரிப்பாக்கம் 15 கி.மீ. தொலைவில் திருப்பாற்கடல் உள்ளது.
வேலூர்-காவிரிப்பாக்கம்-சோளிங்கர் சாலையில் 6 கி.மீ தொலைவில் தியாகமுகசேரி உள்ளது. இதை திசைமுகசேரி என்றும் தியாசேரி என்றும் அழைப்பர். இங்கு பெருமாள் அபூர்வ கோலமாக ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். வியாதியின் காரணமாக முதியவர்கள் அவஸ்தையில் இருக்கும்போது இவரிடம் தீர்த்தம் பெற்றுக் கொடுத்தால் சிரமமில்லாமல் பெருமாள் தன்னிடம் அழைத்துக் கொள்வார் என்று நம்பிக்கை இவ்வூரில் உள்ளது.