Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி பெருமாள் கோவில்களில் ... திருக்கோஷ்டியூரில் மூன்று நிலைகளில் பெருமாள் எழுந்தருளல் திருக்கோஷ்டியூரில் மூன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி: கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வர உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி: கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வர உத்தரவு

பதிவு செய்த நாள்

26 டிச
2020
11:12

 காரைக்கால்: திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதற்கு வரும் பக்தர்கள், கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்று வர வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான், தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.அதிகாலை, 5:22 மணிக்கு சனி பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கொரோனா கட்டுப்பாடுகளுடன், கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60வயது முதியோர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். நளன் குளத்திற்கு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புக்கு, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த, 2,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கவர்னர் உத்தரவு: கவர்னர் கிரண்பேடி, சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவு: இன்று, 26ம் தேதி மற்றும் நாளை, 27ம் தேதி, திருநள்ளாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றுச் செல்ல வேண்டும். சனீஸ்வரர் கோவில் வழிபாட்டு தலம். எனவே, கொரோனா தொற்று இல்லை என முடிவு தெரிந்த பின் கோவிலுக்கு செல்லுங்கள். தொற்று இல்லை என்ற சான்றிதழை, உடன் வைத்து கொள்ளவும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், விழாவை நேரடியாக காணொலியில் காணுங்கள். இதற்காக, சிறந்த கேமராக்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.சனிப்பெயர்ச்சி விழாவை ஒளிபரப்பும் ஊடகங்கள் சார்பில் செல்லும் நபர்களும், கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

குச்சனுார்: தேனி மாவட்டம், குச்சனுார் சுரபி நதிக்கரையில், சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளிய கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. நாளை அதிகாலை, 5:22 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடக்கிறது. முகக் கவசம் அணிந்து வரும் பக்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என, பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் கண்டனம்: புதுச்சேரி கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:கவர்னர் கிரண்பேடி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். இவ்விஷயத்தில், கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோவில்களில், மத்திய அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்றி வரும் நிலையில், மத்திய பா.ஜ., அரசு நியமித்த கவர்னர் கிரண்பேடி, சனிப்பெயர்ச்சி விழாவிற்கு பக்தர்களை வர விடாமல் தடுக்கும் வகையில் நெருக்கடி கொடுத்துள்ளார். சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றால், சுமார் 6 கோடி ரூபாய், கோவிலுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், கவர்னர் செயல்பாட்டால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar