உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் 9ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் 9ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா ஊர்வலம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 108 நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் இசைத்து வண்ணம் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் வழியாக மணிகூண்டு சென்றடைந்தனர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சிவசங்கர், துணைத் தலைவர் செல்வம், செயலாளர் தெய்வநாயகம், துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.