மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக திருவிழா, கடந்த, 17ல் தொடங்கியது. அதையொட்டி, நேற்று, பெரிய தேரோட்டம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு தொடங்கிய தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர். 6:30 மணிக்கு, கிழக்கு கோபுரத்தை கடந்த தேர், கிராம சாவடியை அடைந்தது. அங்கு, தேர் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மாலை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நிலையத்தில் சேர்ப்பர்.