பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த சுள்ளியாங்குப்பம் அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. நேற்று மயானக் கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு மதிக்கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் மயானகொள்ளை திருவிழா நடந்தது.