புதுச்சேரி : குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி குருமாம்பட்டு, ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாய லலிதாம்பிகை கோவிலில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை லலிதா ஹோமம், மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, யோகி லலிதா மகாமேரு டிரஸ்ட் செய்திருந்தது.