காரைக்கால்: காரைக்கால் மண்டபத்துாரில் நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.காரைக்கால் மண்டபத்துார் மீனவ கிராமத்தில் மாசி மகத்தையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்துார், வரிச்சிக் குடி, மேலகாசாகுடி, பூவம், திருவேட்டக்குடியை சேர்ந்த 11 கிராம கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.