பதிவு செய்த நாள்
06
மார்
2021
04:03
சென்னை : திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்து வரும், நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவத்தின், பிரதான நாளான நேற்று, கருட சேவை உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசித்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடப்பது வழக்கம்.கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட, நரசிம்ம பிரம்மோற்சவம், 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.பிரம்மோற்சவத்தின் பிரதான விழாவான, கருட சேவை உற்சவம், நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, உற்சவர் தெள்ளிய சிங்கர், சர்வ அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார்.பின், காலை, 5:30 மணிக்கு, கோபுர தரிசனம் நடந்தது. தொடர்ந்து, கருட வாகனத்தில், மாடவீதிகளை, உற்சவர் தெள்ளியசிங்கர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமானோர் பங்கேற்று தரிசித்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு, சூரிய பிரபையும், இரவு, 8:00 மணிக்கு சந்திர பிரபை சேவையும் நடக்கிறது.