திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் காரடையான் நோன்பை முன்னிட்டு பெண்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாசி கடைசி நாளும், பங்குனி முதல் நாளும் இணைகிற நேரத்தில் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.வீடுகளில் பெண்கள் பூஜை அறையில் விளக்கேற்றி அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்லி வழிபட்டனர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு நடந்தது.