சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பெரியகுளத்தில், சந்தன மாரியம்மன்கோவில் கும்பாபி ?ஷக விழா, கடந்த ஜன., 27ல் நடந்தது. தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரங்கம் நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு, மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில், 108 சங்கு பூஜை, கொங்கு நடன நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கொங்கு நடனமாடி, கும்மி அடித்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பெரியகுளம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.