ராசிபுரம்: ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா முடிந்தது. ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு சிவராத்திரி விழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 13 காலை, 7:00 மணிக்கு நடந்த தீ மிதித்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை, முத்துக்காளிப்பட்டி மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள், 30க்கும் மேற்பட்ட ஆடுகள், 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாயால் கடித்து பலியிட்டனர். பக்தர்களுக்கு ரத்தச்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிந்தது.