திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் கோயிலில் இரட்டை கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2021 08:03
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு இரட்டை கருடசேவை நடந்தது.
நான்காம் திருநாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமியின் ஆசிரமத்தில் அதிகாலையில் ஆதிஜெகநாத பெருமாள் எழுந்தருளினார். அலங்கார விஷேச திருமஞ்சனம் நடந்தது. ஆதி ஜெகநாத பெருமாள் கருட வாகனத்திலும் மற்றொரு கருடவாகனத்தில் பட்டாபிஷேக ராமரும் எழுந்தருளினர். நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் பெரிய திருவாய்மொழி பாடல்கள், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மேலாளர் ரகுவீரதயாள், சமஸ்தான பேஸ்கர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.