பரமக்குடி பெருமாள் கோயிலில் மார்ச் 28 ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2021 02:03
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்ச் 28-ல் பங்குனி திருக்கல்யாணம் நடக்கிறது.
இக்கோயிலில் மதுரை அழகர் கோவிலைப் போன்றே ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண விழா நடப்பது வழக்கம். இதன்படி மார்ச் 27 இரவு 8:00 மணிக்கு மேல் அனுக்கையுடன் விழா துவங்கும். மார்ச் 28 காலை 9:00 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், தொடர்ந்து சௌந்தரவல்லி தாயார் - சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண விழா நடக்கிறது. மார்ச் 31ல் மாற்றுத்திருக்கோலம், ஏப்., 1 இரவு புஷ்பப் பல்லக்கில் பட்டணப் பிரவேசம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.