கயத்தாறு: கயத்தாறில் சுடலைமாடசுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கயத்தாறு மெயின் ரோட்டில் உள்ள பணிக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலைமாடன் கோயிலில் சுடலைமாடசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 3ம் தேதி காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோமம், தனபூஜை, முதல்கால பூஜை நடந்தது. 4ம் தேதி அதிகாலையில் 2ம் கால யாகசாலை பூஜை துவங்கியது. சுடலைமாடசாமி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜை, சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது. அதன் பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. 5ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் 41 நாட்கள் நடந்தது. ஜூலை மாதம் 17ம் தேதி மண்டலாபிஷேகம் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன் பின்னர் 27ம் தேதி அன்று கோயில் கொடை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.